புதன், 19 மார்ச், 2025

நாணயம் மனுஷனுக்கு அவசியம்

நாணயம் மனுஷனுக்கு அவசியம் - தம்பி

நாணயம் மனுஷனுக்கு அவசியம்

மிகவும் அவசியம் - அதுவே

நல்லோர்கள் சொல்லிவைத்த

நன்மையான ரகசியம்

நாணயம் மனுஷனுக்கு அவசியம்

.

வாணிபத்தில் புரளுவது இந்த நாணயம் - மனிதன்

வாக்கை காக்க உதவுவது சொந்த நாணயம்

மனிதன் சொந்த நாணயம்

வயித்து பசியை தீர்த்து வைக்கும் இந்த நாணயம்  - மனிதன்

வாங்கும் கடனை கொடுக்க சொல்லும் சொந்த நாணயம்

.

தம்பி

நாணயம் மனுஷனுக்கு அவசியம்

மிகவும் அவசியம் - அதுவே

நல்லோர்கள் சொல்லிவைத்த

நன்மையான ரகசியம்

நாணயம் மனுஷனுக்கு அவசியம்

.

கடன் வாங்கி மாடி வீடு கட்டக்கூடாது

கடன் வாங்கி மாடி வீடு கட்டக்கூடாது - அதை

உடனடியாய் மனைவி பெயரில் எழுதக்கூடாது

உயிலும் எழுதக் கூடாது

கருப்பு மார்கெட் செய்து பணத்தை திரட்டக்கூடாது - ஓங்கி

காசுக்காக பொய் சாட்சி சொல்லக்கூடாது

.

தம்பி

நாணயம் மனுஷனுக்கு அவசியம்

மிகவும் அவசியம் - அதுவே

நல்லோர்கள் சொல்லிவைத்த

நன்மையான ரகசியம்

நாணயம் மனுஷனுக்கு அவசியம்

.

நாணயத்தை பேச்சில் மட்டும் காட்டக்கூடாது - நம்மை

நம்பினோர்க்கு திருட்டு கணக்கு எழுதக்கூடாது

நாணயத்தை பேச்சில் மட்டும் காட்டக்கூடாது - நம்மை

நம்பினோர்க்கு திருட்டு கணக்கு எழுதக்கூடாது

மானம் போக்கும் லஞ்சம் எதிலும் வாங்கக்கூடாது

மானம் போக்கும் லஞ்சம் எதிலும் வாங்கக்கூடாது

காளை மாடாய் உழைத்தே சாப்பிடத் தயங்கக்கூடாது

.

தம்பி

நாணயம் மனுஷனுக்கு அவசியம்

மிகவும் அவசியம் - அதுவே

நல்லோர்கள் சொல்லிவைத்த

நன்மையான ரகசியம்

நாணயம் மனுஷனுக்கு அவசியம்

மிகவும் அவசியம்.

திரைப்படம்:- அமர தீபம்;

ரிலீஸ்:- 20th ஜூன் 1956;

இசை:- T.சலபதி ராஜு;

பாடலாசிரியர்:- K.P.காமாட்சி சுந்தரம்;

பாடியவர்:- TMS;

நடிப்பு:- சிவாஜி கணேசன்.

செவ்வாய், 5 நவம்பர், 2024

உலகம் சமநிலை பெறவேண்டும்

திரைப்படம்: அகத்தியர்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: 
உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்
இசை: 
குன்னக்குடி வைத்தியநாதன்
ஆண்டு: 1972

உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்
உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்

நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்

உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்

இமயமும் குமரியும் இணைந்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே

உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்

உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்

அறிவும் அன்பும் கலந்திடவே
அழவில் வையம் மலர்ந்திடவே

நெறியாய் மனிதன் வளர்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே

உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்

உலகம் சமநிலை பெறவேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்

ஞாயிறு, 26 மே, 2024

கலையரசி திரைப்பட ப் பாடல்

அதிசயம் பார்த்தேன் - Aadhisayam Paarthen

அதிசயம் பார்த்தேன் - Aadhisayam Paarthen


Lyrics:
தஞ்சமென்று வந்தவரைத் தாய்போல் ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு
வாள் முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடம் கொடுத்து
அறங் காக்கும் மக்களிடம்
பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா?

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே
நான் அதிசயம் பார்த்தேன் மண்ணிலே
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே
மூணுபக்கமும் கடல் தாலாட்டுது
தன்மானமுள்ள மக்களைப் பாராட்டுது
வானுயரும் மலையில் அருவி பெருகியே
வந்துவந்து நிலத்தை நீராட்டுது
பல வளம்பெருகி மறவர் பேர்நாட்டுது

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே
நான் அதிசயம் பார்த்தேன் மண்ணிலே
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே

மலையைச் செதுக்கிவச்ச சிலையிருக்கு
அதில் மனங்கவரும் அழகுக் கலையிருக்கு,
மானிருக்கு வண்ண மயிலிருக்குச்
செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே
நான் அதிசயம் பார்த்தேன் மண்ணிலே
அது அப்படியே நிக்குது எங்கண்ணிலே

அங்கே- சந்தன மரக்கிளையும் தமிழ்க்கடலும்
தழுவி சந்தமிசைத்துத்
தென்றல் தவழ்ந்து வரும் செந்தாழை மலர்தொட்டு
மணம்சுமந்து வரும்
இங்கே தங்கிட நிழலுமில்லை
பொங்கிடக் கடலுமில்லை
சற்று நேரங்கூட வெயில் மறைவதில்லை
நம்மை தழுவிடத் தென்றலெதும் வருவதில்லை.

அதிசயம் பார்த்தேன் - Aadhisayam Paarthen Song Lyrics / Movie கலை அரசி - Kalai Arasi (1963)